குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடகம்... பள்ளிக்கு சீல் வைத்த காவல் துறை..!  - Seithipunal
Seithipunal


மீபத்தில் அனைவராலும் பேசப்பட்டு வரும் செய்தி குடியுரிமை சட்ட திருத்தம். இந்த சட்டத்தை எதிர்த்து, பல இடங்களில் போராட்டங்கள் வெடித்து கொண்டு தான் இருக்கின்றது. பல தரப்பிலும் தொடர்ந்து போராட்டங்களை நடத்திய வண்ணம் இருக்கிறார்கள். 

அந்த வகையில், கர்நாடகாவில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக 4ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளித்து நாடகம் நடிக்க வைத்த பள்ளிக்கு போலீசாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது. 

பிதார் மாவட்டத்தில் இருக்கும் ஷாஹீன் என்னும் பள்ளி ஒன்றில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அந்த பள்ளி மாணவர்களுக்கு நாடகம் நடத்த பயிற்சி அளித்து அரங்கேற்றிய காரணத்திற்காக போலீசார் அந்த பள்ளியின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் அந்த பள்ளிக்கு சீல் வைத்திருக்கிறது. 

மேலும்,மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்ககு எதிராக உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடத்த, கேரளாவை சேர்ந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிதி உதவி செய்தாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்திருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school drama against caa


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->