இது காலா..? கார் டயரா..? எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் தாண்ட போறாரு தெரியுமா..? நெகிழ வைக்கும் பின்னணி..! - Seithipunal
Seithipunal


பெண் குழந்தைகள் பாதுகாப்பு, மற்றும் கல்விக்காக கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் 6 ஆயிரம் கிலோ மீட்டர் ஒற்றை சக்கரத்தை கால்களில் அணிந்து ஸ்கேட்டிங் சாகசபயணத்தை மேற்கொண்டுள்ளார்.

சர்வதேச ஸ்கேட்டிங் வீரரான ராணா உப்பலபட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் இந்த பயணத்தை தொடங்கினார்.

டைட்டன் நிறுவனமும் டாடா குழுமமும் ராணாவின் பிரச்சாரத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. 90 நாட்களில் அவர் 6000 கி.மீ தூரம் இந்தியாவின் நான்கு முனைகளையும் தொடும் வகையில் தங்க நாற்கர சாலைகளில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கர்நாடகாவின் சித்ரதுர்கா, `ஹூப்ளி, பெல்காம் வழியாக மகாராஷ்டிரா சென்று அங்கு மும்பை, புனே, கோலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பயணம் மேற்கொண்டு குஜராத்தைச் சென்றடைந்தார்.

குஜராத்தின் பரூச், வதோதரா உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து டில்லி, லக்னோ, வாரணாசி, பாட்னா, தன்பாத், கொல்கத்தா, புவனேஷ்வர், விசாகப்பட்டினம், ஹைதராபாத், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயணம் மேற்கொண்டு தற்போது சென்னை வந்தடைந்துள்ளார்.

இதுவரை 5500கிமீ கடந்துள்ளார். இந்த சாகச பிரச்சார பயணத்தின் முலமாக 16,200 ஏழைப் பெண் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்குத் தேவையான நிதியை அவர் திரட்டியுள்ளார். சென்னை மியூசிக் அகாடமியில் அவருக்கு டைட்டன் நிறுவனத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

scatting person reaches india end to end


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->