டெண்டுல்கரின் சாதனையை உடைத்த சலூன்கடை பெண்கள்.! சச்சின் வெளியிட்ட புகைப்படத்தால் வியந்துபோன ரசிகர்கள்!! - Seithipunal
Seithipunal


உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பன்வாரி டோலா என்ற கிராமத்தில் வசித்தது வருபவர்கள் இளம்பெண்கள் நேகா மற்றும் ஜோதி . கடந்த 2014-ம் ஆண்டு இவர்களது தந்தையின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கியதால், குடும்பத்தை நடத்தவும், கல்வியை தொடரவும் தந்தை நடத்திவந்த சலூன் கடையை நடத்த வேண்டிய நிலை உருவானது.

மேலும் ஆரம்பத்தில் இவர்களிடம் முடி வெட்டவோ அல்லது முகச்சவரம் ஷேவிங் செய்து கொள்ளவும் ஆண்கள் பெருமளவில் தயங்கினர். அனால் நாட்கள் கடந்துபோன அனைவரும் கடைக்கு வரத்துவங்கி  நிலைமை சரியானது.

மேலும் அவற்றில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு  நேகாவும், ஜோதியும் வேலை பார்த்து கொண்டே கல்வியை தொடர்ந்து வருகின்றனர். மேலும் அவர்களது  தந்தையின் மருத்துவ செலவையும் கவனித்துக் கொள்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த பெண்களின் கல்வி உதவிக்காக இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் அவர்களிடம் ஷேவிங் செய்து கொள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. 

இந்நிலையில் ஷேவிங் செய்யும்  புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சச்சின் தெண்டுல்கர், எனது வாழ்க்கையில் இதற்கு முன்பு நான் மற்றொருவரிடம் ‘ஷேவிங்’ செய்தது கிடையாது. அச்சாதனை இப்போது உடைக்கப்பட்டு விட்டது. அந்த சலூன்கடை பெண்களை நேரில் சந்தித்ததை பெருமையாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார். அந்த நிறுவனம் சார்பில் இவர்களின் கல்விக்கும், தொழிலுக்கும் தேவையான உதவிகளையும் சச்சின் தெண்டுல்கர் வழங்கினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sachin post about barbershop girls


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->