சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரம்.. விசாரணைக்கு தேதி குறித்த நீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


உச்சநீதிமன்றம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட அனைத்து பெண்களும் செல்ல அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்ட போது எல்லாம் சில பெண்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். ஆனால் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐயப்ப பக்தர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன் காரணமாக பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதற்கிடையே, கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உத்தரவிட்ட தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பலரும் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையானது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்., பெண்களை அனுமதிப்பது தொடர்பான மறுஆய்வு மனுக்கள் மீது ஜனவரி 13 ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்றும்., 9 பேர் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வில் இவ்வழக்கு விசாரணை நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sabarimala issue court starts investigation from January 13


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->