இந்திய கடற்படைக்கு விடைகொடுத்து, ரஷியாவிற்கு செல்லும் ஐ.என்.எஸ் சக்ரா 2 என்ற நெர்பா..! - Seithipunal
Seithipunal


இந்திய கடற்படையில் இயங்கிவந்த ஒரே ஒரு அணுசக்தி நீர் கப்பலான ஐ.என்.எஸ் சக்ரா 2 தனது குத்தகை காலம் முடிவடைந்ததால் ரஷ்யாவுக்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரஷ்ய நாட்டின் நெர்பா (Russian submarine Nerpa) என்ற நீர்மூழ்கி கப்பலை இந்தியா கடந்த 2010 ஆம் வருடம் பத்து வருட கால குத்தகைக்கு எடுத்தது. ரஷியாவின் நெர்பா 2 நீர்மூழ்கி கப்பலுக்கு ஐ.என்.எஸ் சக்ரா 2 (INS Chakra 2) என்று பெயரிடப்பட்டு இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. 

ரசியாவின் 28 ஆயிரத்து 140 டன் எடை கொண்ட கப்பலாக இருந்து வந்த ஐ.என்.எஸ் சக்ரா கடந்த பத்து வருடமாக இந்திய கடல் எல்லையை பாதுகாப்பதிலும், சீனப் போர்க்கப்பல் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதிலும் நிகரற்று இந்தியாவிற்கு பெரும் உதவி செய்தது. 

இந்த நிலையில், இந்த நீர்மூழ்கி கப்பல் பராமரிப்பு பிரச்சினை காரணமாகவும், குத்தகை காலம் நீட்டிக்கப்படாததன் காரணமாகவும் ரஷ்யாவிற்கு திரும்பிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russian Submarine Nerpa Went Russia due to Contract Period Ends INS Chakra 2


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->