5 மாத குழந்தையின் தொண்டையில் மோதிரம்..  மருத்துவர்கள் எடுத்த அதிரடி முடிவு..!  - Seithipunal
Seithipunal


அண்மையில், குழந்தை ஒன்று ஊக்கை விழுங்கி உடலுக்குள் சிக்கிய சம்பவம் நடைபெற்றது. அதன்பின் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலமாக அதனை வெளியெடுத்தார்கள். அவ்வப்போது இது போன்ற சம்பவம் நடந்து கிலியை உண்டாக்குகிறது. 

அந்த வகையில், தெலுங்கானா மாவட்டத்தில் 5 மாத குழந்தை ஒன்று மோதிரத்தை விழுங்கியது, இதனால் உயிருக்கு போராடிய நிலையில் இருந்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. தெலுங்கானாவில், நிஜாமாபாத் நகரில் வசித்து வரும் தம்பதி ஒருவர் தங்களின் 5 மாத குழந்தைக்கு நகைகளை போட்டு அலங்கரித்து இருக்கிறார்கள். அப்போது அந்த குழந்தை கைவிரலில் இருந்த மோதிரத்தை எடுத்து வெடுக்கென விழுங்கியுள்ளது.  இதனால் மோதிரம் குழந்தையின் தொண்டையில் சிக்கியிருக்கிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர், உடனடியாக குழந்தையை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு ஓட குழந்தையின் நிலைமை மேலும் கவலைக்கிடமானது.  இதை தொடர்ந்து, குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து, மோதிரத்தை, டாக்டர்கள் வெளியில் எடுத்து விட்டார்கள். இந்த நிலையில் குழந்தையின் உடல்நிலை தற்போது சீராகியுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் குழந்தை தொடர் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ring in 5 month baby Throat


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->