மதம் மாறினால் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது! - Seithipunal
Seithipunal


ஆர்எஸ்எஸ் அமைப்பின் நான்கு நாள் கூட்டம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் இறுதி நாளான நேற்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது "இந்த ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது. நம் நாடு மத மாற்றம் மற்றும் வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளின் ஊடுருவல் காரணமாக மதரீதியான மக்கள் தொகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மதத்தின் அடிப்படையில் மக்கள் தொகை பெருக்க விகிதாச்சாரம் ஏற்றத்தாழ்வு கண்டுள்ளது. உத்திரபிரதேசம் போன்ற சில மாநிலங்களில் உள்ள மதமாற்ற தடைச் சட்டத்தை நாடு முழுவதும் தீவிரமாக செயல்படுத்த வேண்டிய சூழல் நிலவி வருகிறது.

மதமாற்றம் குறித்து தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மதம் மாறியவர்கள் மீண்டும் இந்து மதத்திற்கு திரும்பி வருகின்றனர். நாம் அரசாங்கம் மதம் மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு உட்பட எந்த சலுகை வழங்கக் கூடாது" என பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reservation should not be given if change religion


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->