பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டிற்கு ஜனாதிபதி ஒப்புதல்! விரைவில் அமலாகிறது - Seithipunal
Seithipunal


பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பல ஆண்டுகளாகவே பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எந்த சாதியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது.  
 
அதன் அடிப்படையில், முற்பட்ட வகுப்பினர்களில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்து, இது தொடர்பான சட்ட மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தாக்கல் செய்து, மசோதா நிறைவேற்றப்பட்டது. 
 
இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீட்டிற்கான அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். 

மேலும், இடஒதுக்கீடு அமலுக்கு வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Reservation 10 % is Give Permission President


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal