#வீடியோ: ரெஹானாவின் பாலியல் விழிப்புணர்வு வீடியோ.. இணையத்தில் வைரல்..!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என்று டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து கனகதுர்கா, பிந்து என்று இரண்டு பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்ற நிலையில், பாத்திமா என்ற பெண் செயற்பாட்டாளரும் சபரிமலைக்கு செல்ல முயன்று தோல்வி அடைந்தார். இதன் காரணமாக பாத்திமாவின் மீது கோபமடைந்த இந்து அமைப்புகள் பல போராட்டங்கள் நடத்தினர். 

மேலும், இந்து மதத்தினை அவமதிக்கும் வகையில் முகநூல்களில் பல சித்தரிப்பு படங்கள் வெளியிட்ட ரெஹானா பாத்திமா, சபரிமலைக்கு செல்ல விரதம் இருந்து மாலை அணிவித்து வந்திருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் மற்றொரு வீடியோவை பகிர்ந்துள்ளார். கடந்த ஜூன் 19 ஆம் தேதியன்று தனது அரைநிர்வாண உடலுடன் தனது மகன் மற்றும் மகள் தனது மார்பு மற்றும் வயிறு பகுதியில் ஓவியம் வரைவது போல வீடியோவை பதிவு செய்துள்ளார்.  

இது குறித்த வீடியோவை இந்த வீடியோவை #BodyArtPolitics என்ற ஹேஷ் டேக்குடன் பகிர்ந்த நிலையில், இந்த வீடியோ பெரும் வைரலாகி வருகிறது. மேலும், சிறு வயது மகனும், மகளும் பாத்திமாவின் உடலில் ஓவியங்கள் வரைவது குறித்த காட்சிகளும், தாயின் உடலை பார்த்து வளரும் குழந்தைகள்தான் பெண்களின் உடலை அனுமதிக்காது என்றும், பெண்களின் உடலமைப்பு பற்றிய விழிப்புணர்வை வீட்டிலிருந்த கற்றுக் கொடுத்தால் தான் நல்லது. 

பாலியல் மற்றும் நிர்வாணம் தடைசெய்யப்பட்ட ஒரு சமூகத்தில் பெண்கள் பாலியல் மற்றும் அவர்களின் உடலைப் பற்றி வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் அறிவதற்காக இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக ரெஹானா பாத்திமா தெரிவித்தார். மேலும், ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண் உடலும், அவளது நிர்வாணமும் 50 கிலோவிற்கு மேல் வெறும் சதை தான்.

அதே நேரத்தில், ஆண் என்றால் ஆபாசம் இல்லை என்றும், தற்போது இந்த சமூகத்திற்கு தவறான பாலியல் உணர்வுகள் இருப்பதைப் போலவே, பார்ப்பவர்களின் பார்வையில் தான் ஆபாசமும் உள்ளது என்றும் அந்த வீடியோ காட்சியில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. 

பாத்திமாவின் செயல் தொடர்பாக கருத்து தெரிவித்த மனநல மருத்துவர், தாய் மற்றும் அவரது குழந்தைகள் சம்பந்தப்பட்ட வீடியோவில் எந்தவிதமான ஆபாசத்தையும் காணவில்லை என்றும், இது ஒரு தனிப்பட்ட நபர் சம்பந்தமாக இருந்தால் பிரச்சினை இல்லை. அதனை படமாக்கிய பொதுமக்கள் பார்க்கும் வகையில் பொது வெளியில் விடும்போது தான் பிரச்சனை ஏற்படுகிறது. இது போன்று உடலை காண்பித்து தான் பெண்களின் வலிகளை உணர்த்தவேண்டும் என்ற அவசியம் இல்லை. பிறரின் வலியை மனதளவில் புரிந்துகொள்ளும் நடைமுறைக்கு பழக்கப்படுத்தினாலே, யாருக்கும் தீங்கு இழைக்கக்கூடாது என்ற எண்ணம் ஓங்கும் என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rehana Fathima BodyArtPolitics video trending in social Media


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->