சிக்கலில் ரெஹானா... காரசார கேள்வியை முன்வைத்த நீதிபதிகள்.!! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை கோவிலுக்கு பெண்களும் செல்லலாம் என்று டெல்லி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து கனகதுர்கா, பிந்து என்று இரண்டு பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்ற நிலையில், பாத்திமா என்ற பெண் செயற்பாட்டாளரும் சபரிமலைக்கு செல்ல முயன்று தோல்வி அடைந்தார். இதன் காரணமாக பாத்திமாவின் மீது கோபமடைந்த இந்து அமைப்புகள் பல போராட்டங்கள் நடத்தினர். 

மேலும், இந்து மதத்தினை அவமதிக்கும் வகையில் முகநூல்களில் பல சித்தரிப்பு படங்கள் வெளியிட்ட ரெஹானா பாத்திமா, சபரிமலைக்கு செல்ல விரதம் இருந்து மாலை அணிவித்து வந்திருப்பதாக தெரிவித்தார். இந்த நிலையில், சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் மற்றொரு வீடியோவை பகிர்ந்து இருந்தார்.. கடந்த ஜூன் 19 ஆம் தேதியன்று தனது அரைநிர்வாண உடலுடன் தனது மகன் மற்றும் மகள் தனது மார்பு மற்றும் வயிறு பகுதியில் ஓவியம் வரைவது போல வீடியோவை பதிவு செய்திருந்தார்.

இது குறித்த வீடியோவை #BodyArtPolitics என்ற ஹேஷ் டேக்குடன் பகிர்ந்த நிலையில், இந்த வீடியோ பெரும் வைரலாகியது.. மேலும், சிறு வயது மகனும், மகளும் பாத்திமாவின் உடலில் ஓவியங்கள் வரைவது குறித்த காட்சிகளும், தாயின் உடலை பார்த்து வளரும் குழந்தைகள்தான் பெண்களின் உடலை அனுமதிக்காது என்றும், பெண்களின் உடலமைப்பு பற்றிய விழிப்புணர்வை வீட்டிலிருந்த கற்றுக் கொடுத்தால் தான் நல்லது. 

பாலியல் மற்றும் நிர்வாணம் தடைசெய்யப்பட்ட ஒரு சமூகத்தில் பெண்கள் பாலியல் மற்றும் அவர்களின் உடலைப் பற்றி வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் அறிவதற்காக இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக ரெஹானா பாத்திமா தெரிவித்தார். மேலும், ஆண்களுடன் ஒப்பிடுகையில், பெண் உடலும், அவளது நிர்வாணமும் 50 கிலோவிற்கு மேல் வெறும் சதை தான்.

அதே நேரத்தில், ஆண் என்றால் ஆபாசம் இல்லை என்றும், தற்போது இந்த சமூகத்திற்கு தவறான பாலியல் உணர்வுகள் இருப்பதைப் போலவே, பார்ப்பவர்களின் பார்வையில் தான் ஆபாசமும் உள்ளது என்றும் அந்த வீடியோ காட்சியில் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. இதனால் கடும் எதிர்ப்புகளும் கிளம்பிய நிலையில், காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், பாத்திமாவின் செயல் தொடர்பாக கருத்து தெரிவித்த மனநல மருத்துவர், தாய் மற்றும் அவரது குழந்தைகள் சம்பந்தப்பட்ட வீடியோவில் எந்தவிதமான ஆபாசத்தையும் காணவில்லை என்றும், இது ஒரு தனிப்பட்ட நபர் சம்பந்தமாக இருந்தால் பிரச்சினை இல்லை. அதனை படமாக்கிய பொதுமக்கள் பார்க்கும் வகையில் பொது வெளியில் விடும்போது தான் பிரச்சனை ஏற்படுகிறது. இது போன்று உடலை காண்பித்து தான் பெண்களின் வலிகளை உணர்த்தவேண்டும் என்ற அவசியம் இல்லை. பிறரின் வலியை மனதளவில் புரிந்துகொள்ளும் நடைமுறைக்கு பழக்கப்படுத்தினாலே, யாருக்கும் தீங்கு இழைக்கக்கூடாது என்ற எண்ணம் ஓங்கும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், ரெஹானா கைதாகாமல் இருக்க கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், இது குறித்த முன்ஜாமின் மனுவில், " எனது குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை கற்றுக்கொடுக்க ஓவியத்தை உடல் மீது வரைய செய்ததாகவும், குழந்தைகளுக்கு பாலியல் குறித்த புரிதல் மிகவும் அவசியம் " என்றும் கூறியுள்ளார். இது குறித்த மனுவை ஏற்ற நீதிபதிகள், " குழந்தைகளுக்கு பாலியல் கல்வி தொடர்பாக கற்றுக்கொடுக்க ஆசைப்பட்டால் அதனை வீட்டிற்குள் செய்திருக்க வேண்டும் என்றும், அதனை சமூக வலைதளத்தில் எதற்காக? வெளியிட்டுள்ளீர்கள் " என்றும் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதனால் ரெஹானா எப்போதும் கைதாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rehana Fathima anticipatory bail cancelled by Kerala High Court


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->