இரண்டு நாட்களாக கொட்டி தீர்த்த கன மழை.. 'ரெட் அலர்ட் ' வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் ஒன்றாம் தேதி தொடங்கியது. தற்போது அங்கு கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கொச்சி, எர்ணாகுளம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. 

மேலும், பல வீடுகளில் மழைநீர் புகுந்தது. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு, கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில்,  இடுக்கி மாவட்டத்திற்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. இடுகையில் 20.5 சென்டிமீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்கு அடுத்த 24 மணிநேரத்தில் மிக கனமழை பெய்யும். ஆகையால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 'மஞ்சள் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் சென்னையில் பெய்த ஒரு மணி நேரம் மழையால், சென்னை வெள்ளக்காடாக காட்சியளித்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில சாலைகளில் கார் உள்ளிட்ட வாகனங்கள் மிதக்கும் அளவிற்கு மழைநீர் தேங்கியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

red alert in idukki for heavy rain


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->