ரேஷன், ஆதார் கார்டு இல்லாதவர்களுக்கும் உணவு பொருட்கள் வழங்க காங்கிரஸ் வலியுறுத்தல்!! - Seithipunal
Seithipunal


உலக நாடுகளில் பரவி வரும் கரோனா வைரஸ் தாக்கம் தற்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழகத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  இதன் மூலம் தோற்று பரவுவதை தடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் மக்கள் அனைவருக்கும் உடனே இலவச ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு, காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இதுகுறித்து உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்க்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் "இம்மாதிரியான கடினமான சூழ்நிலையில் மக்களுக்கு விரைவில் இலவச ரேஷன் பொருட்களை அளிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆலோசனையாக நான் கூறுகிறேன். 

நீங்கள் வெளியிட்ட அறிக்கை படி, வருகின்ற ஏப்ரல் ஐந்தாம் தேதி தான் பொருட்கள் வழங்கப்பட இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் அது மிகவும் தாமதமாகிவிடும் பொதுமக்களுக்கு எண்ணெய், பருப்பு, உப்பு, சர்க்கரை ஆகிய பொருட்களை உடனடியாக வழங்க வேண்டும்.

மேலும் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கும் பொருட்களை வழங்க வேண்டும் என்று தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன். மேலும் மாநிலத்தில் பல குடும்பங்கள் எரிபொருள் இல்லாமல் அவதிக்குள்ளாகிறார்கள். அவர்களுக்கு சிலிண்டர்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று அவர் எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ration things issued also to card less peoples 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->