சிறந்த ஆசிரியர்.. இயற்பியல் எளிமை பயிற்றுவித்தல் என இன்னும் பல..! விருதுகளை குவிக்கும் தமிழன்.!! - Seithipunal
Seithipunal


பெரும்பாலான மாணவர்களுக்கு இயற்பியல் துறை என்று கூறினாலே அலர்ஜி என்று தான் கூற வேண்டும்.. அவ்வாறு அலர்ஜியாக இருந்து வந்த பாடத்தினை., மாணவர்கள் காதலிக்கும் வகையில் கற்றுக்கொடுப்பதான் ஆசிரியரின் திறமை.. அவ்வாறு பாடத்தினை காதல் வயப்பட்டு படிக்கும் வகையில் கற்பிக்கும் ஆசிரியருக்காக மாணவர்கள் காத்திருந்தால்., அதுவே அவரின் வெற்றி..

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை மான்கூர்டு பகுதியில் இருக்கும் அடாமிக் எனர்ஜி மத்திய பள்ளியில் இயற்பியல் துறையில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஜெபின் ஜோயல். இவர் இயற்பியல் பாடத்தினை மாணவர்களுக்கு எளிமையாக கற்றுக்கொடுத்ததன் மூலமாக நல்லாசிரியர் விருதினை ஜனாதிபதி இராம்நாத் கோவிந்திடம் இருந்து பெற்றுள்ளார். 

தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் வாவரை கிராமத்தை சொந்தமாக ஒண்ட ஜெபின்., அவரது தந்தை அமோஸ் ஓய்வு பெற்ற ஆசிரியராக இருந்த நிலையில்., இவரின் தாயார் எப்சி பால் அவர்களின் ஆதரவுடன்., தனது கல்வியை வாவரை பள்ளியிலும்., கல்லூரி படிப்பினை மார்த்தாண்டத்திலும் - சென்னையிலும் நிறைவு செய்துள்ளார். 

kanniyakumari, கன்னியாகுமரி.

தற்போது கல்விப்பணியில் 21 வருடங்கள் அனுபவம் உள்ள நிலையில்., இயற்பியலை எளிமையாக கற்றுக்கொவதற்கு 82 விதமான கல்வி சாதனத்தையும் உருவாக்கி., புதுமையான முறையில் இயற்பியலை பயிற்றுவித்துள்ளார். இசைகள் மூலமாகவும்., விளையாட்டுகள் மூலமாகவும் கற்பித்து கொடுத்துள்ளார். 

இவர் கண்டறிந்த சாதனங்கள் பல கண்காட்சிகளில் இடம்பெற்றுள்ள நிலையில்., கடந்த மாதத்தின் செப்டம்பர் 5 ஆம் தேதியன்று நல்லாசிரியர் தேசிய விருதை பெற்றார். இதுமட்டுமல்லாது இவர் களரி., சிலம்பாட்டம் உள்ளிட்ட தற்காப்பு கலைகள் மற்றும் வயலின் இசைப்பலர் போன்ற திறமையை கொண்டவர். இவரின் மனைவியான சுமா ஜெபின் அங்குள்ள வாஷியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ramnath govind gives award for teacher best


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->