மீண்டும் ஒரு மும்பை தாக்குதல்?....! ராஜ்நாத் சிங் அதிரடி பேச்சு..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தலைநகரான டெல்லியில்., இந்திய கடற்படை கமாண்டர்களின் மூன்று நாட்கள் மாநாடானது தற்போது தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்ற தொடங்கி வைத்த ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்., இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அந்தப் பேட்டியில்., பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக - இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் ரயில்வே மந்திரி கூறியிருப்பது பற்றி செய்தியாளர்கள் கேட்ட சமயத்தில்., இந்தியா எந்த சமயத்திலும் ஆக்கிரமிப்பாளராக இருந்ததில்லை. 

எந்த நாட்டையும் தாக்கியது இல்லை. மற்ற நாடுகளுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கொண்டதும் இல்லை., இதுதான் இந்த இந்தியாவின் குணம். இதனை அறியாத பிற நாட்டவர்கள் தீய எண்ணத்தோடு இந்தியா மீது கண் வைத்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வல்லமை நமது ராணுவ படைகளுக்கு உள்ளது. 

rajnath singh,

இந்தியாவின் கடற்படை கண்காணிப்பில் உள்ள கடல் பகுதிகள் பாதுகாப்பாக இருப்பதாக கருதுகிறேன். கடந்த 2008 ஆம் ஆண்டு கடல் மார்க்கமாகவே வந்த பயங்கரவாதிகள் மும்பையில் பயங்கர தாக்குதலை நடத்தியது தற்போது மீண்டும் நடக்க கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். 

இதற்காக மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறோம். தற்போது உள்ள போர்க்கப்பல்கள் இந்திய படைப்புகளாக வரும் நிலையில்., பெரும்பாலான தயாரிப்பு இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. ராணுவ தளவாட இறக்குமதியை குறைக்க முப்படைகளையும் வலியுறுத்தி உள்ள நிலையில்., சவாலை சந்திக்கும் புதிய தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த முப்படைகளும் ஆர்வமாக உள்ளது என்பதை தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajnath singh speech about once again could not like mumbai attack


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->