லடாக் எல்லை விவகாரம் என்ன நிலையில் உள்ளது?.. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில்.! - Seithipunal
Seithipunal


இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், இந்திய - சீனா எல்லை விவகாரம் தொடர்பாக பேசியிருந்தார். இது தொடர்பான பேட்டியில், " இந்தியா - சீனா பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

இந்த பேச்சுவார்த்தையில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. இதுவரை எல்லை தொடர்பான பேச்சுவார்த்தையில் எந்த விதமான வெற்றியும் கிடைக்கவில்லை. இராணுவ மட்டத்திலான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும்.

எந்த விதமான முன்னேற்றமும் இல்லாத சூழ்நிலை ஆக்கபூர்வமானதாக இல்லை. இந்த நிலை நீடித்து வந்தால் படைகளை குறைக்க இயலாது " என்று தெரிவித்தார். இந்த பேட்டியின் மூலமாக, லடாக் எல்லை பகுதியில் படைகளை குறைக்க இயலாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajnath Singh Speech about Ladakh Border Issue 30 Dec 2020


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->