8.7 ஆயிரம் கோடி! ராஜ்நாத் சிங் அதிரடி அறிவிப்பு! பாக்., சீனாவின் கதறல்! - Seithipunal
Seithipunal


இந்திய இராணுவத்துக்கு, 8,722 கோடி ரூபாய்க்கு தளவாடங்கள் கொள்முதல் செய்ய, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற (டி.ஏ.சி) ராணுவ கொள்முதல் கவுன்சிலில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

101 வகையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக, இரண்டு நாட்களுக்கு முன் இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், டி.ஏ.சி.,யின் கூட்டம், இராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டில்லியில் நடைபெற்றது. இதில், இராணுவத்துக்கு, 8,722 கோடி ரூபாய்க்கு, தளவாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், பல இராணுவ தளவாடங்களை, நாட்டின் பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. 

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 106 பயிற்சி விமானங்களை வாங்கவும், கடற்படை, கடலோர பாதுகாப்பு படைகளின், போர் கப்பல்களில் பொருத்துவதற்கான, அதிநவீன துப்பாக்கியை, பி.எச்.இ.எல்., நிறுவனத்திடம் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajnath singh new announcement for indian army


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->