அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அதிரடி தடை விதித்த மத்திய அரசு.! ராஜ்நாத் சிங் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சுயசார்பு திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறைக்கான ராணுவ தளவாடங்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொருளாதாரம், உட்கட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்துதல் மக்கள் தொகை மற்றும் தேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி 'தற்சார்பு இந்தியா' திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 

தற்சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் இறங்கியுள்ளது. அதன்படி பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்படும் 101 பொருட்களின் பட்டியலை வெளியிட்டு அதனை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பில் தன்னம்பிக்கைக்கு இதுவே ஒரு பெரிய படியாகும்.

தடை செய்யப்பட்ட 101 பொருட்களின் பட்டியலில் பீரங்கிகள், துப்பாக்கிகள், தாக்குதலுக்கு பயன்படுத்தும் துப்பாக்கிகள் அமைப்புகள், போக்குவரத்து, விமானம், ரேடார்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மேலும் இந்த தடையை 2020 முதல் 2024 வரை முழுமையாக அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 52 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக உள்நாட்டு உற்பத்தி மேம்படும்.

முன்னதாக நாட்டின் பாதுகாப்புத் துறை துறையில் உள்ள ராணுவ  தளவாடங்களை பல அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வாய்ப்பளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்படும் 101 வகையான ராணுவ தளவாடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொழில்துறை வளர்ச்சிக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும், பாதுகாப்பு துறையின் இந்த முடிவு முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajnath singh announced importent announcement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->