25வது தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம்.! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவி ஏற்றார். இவரது தலைமையில் மாநிலங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து சுஷில் சந்திராவின் பதவிக்காலம் வருகின்ற 14 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஆணையராக இருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜீவ் குமார் அவர்களை, புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

இவர் வருகின்ற 15ஆம் தேதி இந்தியாவின் 25வது தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்க உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajiv Kumar appointed as chief election commissioner of india


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->