ரஜினியின் வருகைக்காக காத்திருக்கும் புனே மக்கள்.. சொந்த ஊர்க்காரர்கள் பெருமிதம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்தின் பூர்வீகமான சொந்த ஊர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே ஆகும். புனேவில் இருந்து சுமார் 60 கிமீ தொலைவில் உள்ள மாவடி கதீபதார் கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் ரஜினியின் குடும்ப பெயரான "கெய்க்வாட்" என்ற பெயரில் பலரும் வசித்து வருகிறார்கள். 

இந்த கிராமத்தினர், தங்களது ஊருக்கு ரஜினியின் வருகையை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துகொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக அக்கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சதானந்த ஜெகதாப் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். 

இது தொடர்பாக அவர் பேசுகையில், " ரஜினிகாந்தின் தாத்தாவின் சொந்த ஊர் இதுவேயாகும். இங்கு இருந்து கர்நாடக மாநிலத்திற்கு அவர்கள் சென்றார்கள். ரஜினியின் குடும்பத்திற்கு சொந்தமான நிலம் இங்கு இருக்கிறது. 

ரஜினிகாந்த் இந்த மண்ணின் மைந்தர். கடந்த சில வருடத்திற்கு முன்னதாக ரஜினிகாந்த் புனே அருகேயுள்ள லோனாவாலா பகுதிக்கு படப்பிடிப்பிற்கு வந்திருக்கையில், அவரை நாங்கள் சென்று நேரில் சந்தித்தோம். அவர் எங்களுடன் இந்தி மொழியில் உரையாற்றினார். 

தனது சொந்த கிராமம் மாவடிக்கு கட்டாயம் ஒருநாள் வருகிறேன் என்று தெரிவித்தார். அவர் தனது வாக்குறுதியை காப்பாற்றுவார் என்று நாங்கள் நம்புகிறோம். அவருக்கு பால்கே விருது கிடைத்துள்ளது எங்களுக்கு பெருமையை அளிக்கிறது " என்று பேசினார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajinikanth Pune Village Peoples Waiting for Rajinikanth Visit to Native


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->