கல்யாணத்துக்கு போனேன்.. கொரோனா வாங்கி வந்தேன்.. அரங்கேறிய பகீர் சம்பவம்..!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸை கட்டுக்குள் வைக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், ஊரடங்கில் திருமணம் நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த சூழலில், மகனின் திருமண நிகழ்ச்சிக்கு விதியை மீறி 50 பேரை அழைத்ததில், 15 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால் ரூ.6 இலட்சத்து 26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 

இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிஹீல்வாடா மாவட்டம் பகுதியை சார்ந்த மகனிற்கு, கடந்த 13 ஆம் தேதி திருமணம் செய்வதாக மணமகனின் தந்தை தேதி குறித்துள்ளார். இந்த திருமண நிகழ்விற்கு விதிமுறையை மீறி 50 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 15 பேருக்கு தற்போதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நிகழ்த்தியில் பங்கேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழக்கவும் செய்துள்ளார். 

இதனையடுத்து, ஊரடங்கினை மீறி அதிகளவு நபர்களை திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க செய்தது மற்றும் கொரோனா பரவ காரணமாக இருந்தது என்று மணமகனின் தந்தைக்கு ரூ.6,26,600 அபராதமாக விதித்து பிஹீல்வாடா மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajasthan Couple Marriage invites 50 relation corona positive 15 person


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->