நாளை நடைபெறவிருந்த இரயில்வே தேர்வுகள் தேதி மாற்றம்.. இந்திய இரயில்வே அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள யூகான் நகரினை மையமாக வைத்து பரவிவந்த கரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் சுமார் 160 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரசால் உலகம் முழுவதும் 8,982 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்தியாவில் 174 பேருக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், 4 பேர் பலியாகியுள்ளனர். 

கரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அதிகளவில் கூட வேண்டாம் என்றும், பள்ளி கல்லூரிகளுக்கு முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. சில தேர்வுகளும் இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. மக்கள் அதிகளவில் கூடும் கோவில்கள், சுற்றுலா தளங்கள், வணிக வளாகங்கள் போன்றவை மூடப்பட்டது.

இந்த நிலையில், இரயில்வேத்துறையின் சார்பாக நடத்தப்படும் தேர்வுகளான இளநிலை பொறியாளர் (Junior Engineer) மற்றும் RRB NTPC Tier 1 தேர்வுகள் நாளை நடைபெறவிருந்த நிலையில், வரும் 30 ஆம் தேதியன்று ஒத்தி வைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தடுத்து தகவலை பெற இரயில்வேயின் இணையதளத்தை பார்க்கவேண்டும் என்று கேட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Railway exam post pended by Indian railway announce


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->