ராகுல் காந்தி தொடர் குற்றச்சாட்டு..மீண்டும் மீண்டும் தேர்தல் ஆணையம் மறுப்பு!
Rahul Gandhis continuous allegations the Election Commission refuses repeatedly
வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு மீண்டும் தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.எந்த வாக்காளரையும் ஆன்லைன் மூலம் நீக்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
சமீப காலமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் ஆணையம் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டு தெரிவித்து வருகிறார் ஆளும் கட்சிக்கு சாதகமாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் இதற்காக தேர்தல் ஆணையமும் ராகுல் காந்திக்கு தக்க பதிலடி கொடுத்தது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறக்கூடாது என்று தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கண்டனத்தை தெரிவித்தது இந்த நிலையில் மேலும் தேர்தல் ஆணையம் மீது தனது அதிருப்தியை ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார் பாஜகவின் ஒரு அணியாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.
மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் லட்சக்கணக்கான வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குகின்றனர்.குறிப்பாக எதிர்க்கட்சிகளுக்கு வாக்களிப்பவர்கள்,பட்டியலின, பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்று எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றசாட்டு கூறிவருகிறார். வாக்கு திருட்டு தொடர்பாக பலமுறை கேள்விப்பட்டிருந்தாலும்,தற்போது தான் 100 சதவீதம் ஆதாரத்தை கண்டறிந்துள்ளோம். ஜனநாயக நடைமுறைகளை பாதுகாப்பதற்காகவே இதனை நான் செய்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் வாக்கு திருட்டில் ஈடுபடுபவர்களை தலைமை தேர்தல் ஆணையர் பாதுகாக்கிறார் என குற்றசாட்டு கூறியுள்ள ராகுல் காந்தி லட்சக்கணக்கானோரை குறிவைத்து வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம், வாக்கு திருட்டு மூலம் இந்திய ஜனநாயகம் அழிக்கப்படுகிறது என தேர்தல் ஆணையம் மீது ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
இந்தநிலையில், ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை, அடிப்படை ஆதாரமற்றவை. ராகுல் காந்தி கூறியதுபோல் ஆன்லைன் மூலம் வாக்காளர்கள் யாரும் நீக்கப்படவில்லை. 2023-ல் அலந்த் தொகுதியில் பெயரை நீக்க சில முயற்சி நடந்தபோது, அதுபற்றி தேர்தல் ஆணையமே புகார் தந்தது.
அலந்த் தொகுதியின் 2018-ல் பாஜக வேட்பாளரும், 2023-ல் காங்கிரஸ் வேட்பாளருமே வென்றனர் என வாக்காளர் பட்டியலில் முறைகேடு என ராகுல் காந்தி அளித்த பேட்டியை பகிர்ந்தது தேர்தல் ஆணையம் எக்ஸ் தள பதிவில் விளக்கம் அளித்துள்ளது.
English Summary
Rahul Gandhis continuous allegations the Election Commission refuses repeatedly