மோடியுடன் போட்டியிட எங்களால் முடியாது., ராகுல்காந்தி பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


பீகார் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான பிரச்சார கூட்டத்தில் இன்று பேசிய ராகுல் காந்தி, பொய் பேசுவதில் பிரதமர் நரேந்திர மோடியுடன் போட்டியிட முடியாது என விமர்சித்துள்ளார்.

பீகாரில் சட்டமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்து முடிந்து உள்ளது. மேலும் இரண்டாம் கட்டமாக நவம்பர் மூன்றாம் தேதியும், மூன்றாம் கட்டமாக நவம்பர் ஏழாம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் ராஷ்ட்ரீய ஜனதாதள கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய ஜனதாதள கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகின்றன. இந்த நிலையில், வால்மீகி நகரத்தில் நடைபெற்ற காங்கிரஸின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் மக்களவை தொகுதி உறுப்பினரும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி தொண்டர்களிடையே உரையாற்றினார்.

அதில், "பண மதிப்பு மற்றும் பொது முடக்கத்தின் நோக்கம் சிறு தொழில்கள், சிறு விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்களை அழிப்பதே ஆகும். இப்போதும் கூட பிரதமர் மோடி 2 கோடி இளைஞர்களுக்கு வேலை தருவேன் என்று பேசி வருகிறார். அவர் பொய் சொன்னார் என அவருக்கே தெரியும். 

காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது. விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தது. நாட்டை எப்படி வழி நடத்துவது என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் எங்களுக்கு பொய் சொல்ல தெரியாது. பொய் சொல்வதில் பிரதமர் மோடியுடன் நாங்கள் போட்டியிட முடியாது" என்று ராகுல்காந்தி பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rahul election campaign in bihar oct 28


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->