போற இடத்திலெல்லாம் ஒரு பொய்! அதேபோல்தான் அங்கேயும்.. மோடியின் வாக்குறுதியை விமர்சனம் செய்த அரசியல் பிரபலம்.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கபடும் என அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி அரசை கண்டித்து டெல்லியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று 12 மணி நேர உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் , முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து அவரது கோரிக்கை  நிறைவேற வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் உண்ணாவிரத மேடைக்கு சென்ற ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். அப்பொழுது கூறியதாவது,

நான் எப்பொழுதும் ஆந்திர மக்கள் பக்கமே நிற்பேன். மேலும் பிரதமர்  ஆந்திர மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டார். பிரதமர் மோடி எங்கெல்லாம் செல்கிறாரோ, அங்கெல்லாம் ஏதாவது ஒரு பொய்யை கூறிவிட்டுவருகிறார்.

ஆந்திராவுக்கு போகும்போது சிறப்பு அந்தஸ்து குறித்து பொய் பேசுகிறார். இதனை தொடர்ந்து இப்பொழுது அவரது நம்பகத்தன்மை முற்றிலுமாக அழிந்துப்போய் விட்டது. 

ஆந்திர  மாநில அந்தஸ்துக்காக அளிக்கப்பட வேண்டிய நிதியை திருடிய பிரதமர் மோடி தொழிலதிபர் அம்பானிக்கு  கொடுத்து விட்டார்’ என கூறியுள்ளார்.


 

English Summary

ragul gandhi teased modi


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal