அடிப்படையிலே ஆட்டம் கண்ட காங்கிரஸ்!! மாற்றமா? ஏமாற்றமா?!  - Seithipunal
Seithipunal


ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக17-வது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் உள்ள மொத்த 543 தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 542 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இத்துடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
 
இன்று காலை முதல், இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது. எனவே, இதையொட்டி நாடுமுழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாகு எண்ணிக்கை துவங்கிய முதலே, பாஜக அதிகபடியான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.

இரண்டாவது இடத்திற்கு காங்கிரஸ் கட்சி பின்தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய 09.20 நிலவரப்படி பாஜக கூட்டணி 294 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 90 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருக்கிறது. மற்ற கட்சிகள் 75 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், வழக்கமாக காங்கிரசின் நிலையான தொகுதியான அமேதி தொகுதிலேயே காங்கிரஸ் பின்னடைவை சந்தித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றிருக்கிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ragul gandhi may fail in amedhi volume


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->