ரூ.5,000 பரிசு | புதுச்சேரி அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!' - Seithipunal
Seithipunal


விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் மருத்தவமனைக்கு அழைத்துச் செல்லும் நல்லெண்ண தூதுவர்களுக்கு (Good Samaritan) ரூ.5,000 பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் என்று, புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுக்குறித்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் Dr.A.S.சிவக்குமார் விடுத்துள்ள அறிவிப்பில், "மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ள திட்டத்தின்படி சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களை விபத்து நடந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நல்லெண்ண தூதுவர்களுக்கு அவர்கள் செய்யும் ஒவ்வொரு உதவிக்கும் (Good Samaritan) பரிசாக ரூபாய் 5000/- (ரூபாய் ஐந்து ஆயிரம்) மற்றும் பாராட்டு சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்படும் (நிபந்தனைகளுக்கு உட்பட்டது). 

மேலும் ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்தில் அவர்கள் புரிந்த சேவையை வைத்து தேசிய அளவில் சிறந்த 10 நல்லெண்ண தூதுவர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் Rs.1,00,000/- (ரூபாய் ஒரு லட்சம்) பரிசு வழங்கி கௌரவிக்கப்படும்.

மேலும் வழிகாட்டுதல் நிபந்தனைகளுக்கு புதுச்சேரி போக்குவரத்து துறையின் கீழ்க்கண்ட இணையதளத்தை பார்வையிடலாம் https://transport.py.gov.in/ என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puyducherry Govt Announce 31012023


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->