மணமேடையில் புஷ்-அப் இதுவும் கப்புள் கோல் தான்.. அசத்திய மணமக்கள்...!! - Seithipunal
Seithipunal


பொதுவாக தம்பதிகள் மற்றும் காதலர்கள் Couple Goals என்ற பெயரில் வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றுவர். அப்படி சமீபத்தில் ஒரு ஜோடி பதிவேற்றிய Couple Goals வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ வைரலாக காரணம் மணமேடையில் மணமகனும் மணமகளும் புஷ்-அப் செய்யும் போட்டியில் ஈடுப்பட்டது தான்.

வடமாநிலத்தை சேர்ந்த புதுமண தம்பதிகள் மணமேடையில் புஷ்-அப் செய்து காண்போரை ஆச்சரியபடுத்தியது. ஜிம் பயிற்சியாளரான இருவரும் மணமேடையில் புஷ் அப் செய்துள்ளனர். இந்த வீடியோவை மணமகள் அக்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இந்த வீடியோவில் பச்பன் கா பியார் என்ற இந்தி பாடல் பின்னனியில் ஒலிக்க மணமக்கள் புஷ் அப் செய்தன. நேற்று பதிவிட்ட இந்த வீடியோ தற்போது வரை சுமார் 3,000 லைக்குகளை பெற்றுள்ளது.

Couple Goals உடன் ஃபிட்னஸ் கோல்ஸையும் இருவரும் அறிவுறுத்தியதாக மணமக்களை பாராட்டி நெட்டிசன்கள்  தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி “லெஹாங்காவின் எடை உங்கள் உடல் எடைக்கு சமமானது  அதனால் இந்த போட்டியில் நீங்கள் தான் வெற்றி பெற்றீர்கள் என மணமகளுக்கு வாழ்த்து தெரிவித்து நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Push-ups on the wedding stage are also unrealistic brides as this is the Couple Goal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->