நாடுமுழுவதும் வேலைவாய்ப்பு திட்டத்தில் பயன் பெற்ற மாநிலங்கள் பட்டியல் வெளியிடு.! தமிழகம் எத்தனாவது இடம் தெரியுமா? - Seithipunal
Seithipunal


மத்திய அரசு நாடு முழுவதும் பி.எம்.ஆர்.பி.ஒய். என்னும் பிரதம மந்திரி ரோஜ்கார் புரொட்சாஹன் யோஜனா என்ற திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இது கூடுதல் பணியாளர்களை நியமிக்க நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது. இதே போன்று, பணியாளர் களுக்கும் சமூக பாதுகாப்பு கிடைத்து விடுகிறது.

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி நிலவரப்படி, புதிதாக 1 கோடியே 18 லட்சத்து 5 ஆயிரத்து 3 பணியாளர்கள் வேலை வாய்ப்பினை பெற்று உள்ளனர். இந்த திட்டத்தை அமல்படுத்தி, பலன் பெற்றதில் நாட்டிலேயே அதிகபட்சமாக 18 சதவீத பங்களிப்புடன் மராட்டிய மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

12 சதவீத பங்களிப்புடன் தமிழ்நாட்டுக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக 14 லட்சத்து 17 ஆயிரத்து 808 பேர் வேலை வாய்ப்பினை பெற்று இருக்கிறார்கள்.

மூன்றாவது இடத்தில் கர்நாடகம் (10 சதவீதம்) உள்ளது. குஜராத் 9 சதவீதம், அரியானா, ஆந்திரா தலா 8 சதவீதம், உத்தரபிரதேசம் 7 சதவீதம், டெல்லி 6 சதவீதம், ராஜஸ்தான் 4 சதவீதம், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் தலா 3 சதவீதம் பங்களிப்பு செய்து இருக்கின்றன.கேரளா, உத்தரகாண்ட், பஞ்சாப் மாநிலங்கள் தலா 2 சதவீத பங்களிப்பை மட்டுமே செய்து இருக்கின்றன. ஒடிசா, சத்தீஷ்கார், இமாசல பிரதேசம், பீகார், ஜார்கண்ட், கோவா மாநிலங்கள் தலா 1 சதவீதம் பங்களிப்பு செய்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Publish a list of states that have been used in the nationwide employment program


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->