உ.பி அரசை பாராட்டினால், கொடுமை இல்லையென ஆகிவிடுமா?.. பிரியங்கா காந்தி பரபரப்பு கண்டனம்.! - Seithipunal
Seithipunal


யோகியின் கொடுமைகளை அவர் மறக்கலாம், மக்கள் அதனை மறக்க மாட்டார்கள் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று முந்தினம் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு சென்றார். அங்கு வளர்ச்சித்திட்ட தொடக்க விழாவில் கலந்துகொண்ட பிரதமர், உத்திரபிரதேசம் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை சிறப்பாக கட்டுப்படுத்திய யோகி ஆதித்யநாத் அரசுக்கு எனது பாராட்டுக்கள் என்று தெரிவித்தார். 

இந்த விஷயத்திற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் போது, யோகி ஆதித்யநாத் அரசு மக்களுக்கு கொடுமை செய்துள்ளது. 

மக்களுக்கு யோகி அரசு இழைத்த கொடுமைகள், அலட்சியம் மற்றும் தவறான நிர்வாகம் தொடர்பான விஷயங்கள் குறித்த உண்மைகளை மோடியின் நற்சான்றிதழால் மறைக்க முடியாது. மக்கள் பல துயரத்தை அனுபவித்துவிட்டனர். 

இந்த உண்மையை நரேந்திர மோடியும், யோகி ஆதித்யானத்தும் மறந்துவிடலாம். ஆனால், அத்தனை துயரத்தையும் அனுபவித்த மக்கள் மறக்க மாட்டார்கள் " என்று தெரிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Priyanka Gandhi Tweet about Uttar Pradesh Yogi Govt wish by Prime Minister Narendra Modi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->