சொத்து விபரங்கள் அடங்கிய இ-அட்டை " ஸ்வாமித்வா "..! - Seithipunal
Seithipunal


இந்திய மக்களுக்கு அவர்களின் சொத்து விபரங்கள் கொண்ட இ-அட்டைகள் விநியோகத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். மத்திய அரசு அமல்படுத்தியுள்ள " ஸ்வாமித்வா " (SVAMITVA Scheme) என்ற திட்டத்தில், சொத்து விபரங்கள் தொடர்பான இ-அட்டைகள் விநியோகம் செய்யப்படுகிறது. 

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஹரியானா மாநிலத்தில் இருக்கும் 1,308 கிரா மக்களுக்கு முதற்கட்டமாக வீடுகளுக்கான சொத்து அட்டைகள் வழங்கும் விழா நேற்று காணொளி வாயிலாக நடைபெற்றது.

டெல்லியில் இருந்து காணொளி வாயிலாக பயணிகளுக்கு சொத்து விபரம் அடங்கிய இ-அட்டைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கிய நிலையில், இந்நிகழ்ச்சியில் ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார், துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா ஆகியோர் கலந்துகொண்டனர். 

மொத்தமாக சுமார் 7 மாநிலங்களில் உள்ள 5,002 பஞ்சாயத்தை சார்ந்த 4.09 இலட்சம் பேருக்கு இந்த இ-சொத்து அட்டை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் பஞ்சாயத்தார்களின் பங்கை பாராட்டி பேசினார். 

மேலும், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் கிராமங்கள் முதல் வெற்றியை பெரும் என்று நம்பிக்கை தெரிவித்த மோடி, கிராமத்தை சார்ந்த மக்கள் நாட்டிற்கும், உலகத்திற்கு வழிகாட்டி வருவதாக பாராட்டு தெரிவித்தார். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister Narendra Modi Starts SVAMITVA SCHEME


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->