இறையாண்மையை பாதிக்கும் செயல் நடந்தால் தக்க பதிலடி - பிரதமர் நரேந்திர மோடி.! - Seithipunal
Seithipunal


நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125 ஆவது பிறந்த நாள் விழாவானது இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. நேதாஜியின் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

மேற்கு வங்கத்தின் தலைநகராக இருக்கும் கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்காள ஆளுநர் ஜெகதீப் தண்கார் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், " இந்தியா முழுவதும் வருடம்தோறும் நேதாஜியின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை " பராக்ராம் நிவாஸ் " அரசு விழாவாக கொண்டாட அறிவிக்கப்பட்டுள்ளது. 

நேதாஜினியின் வாழ்க்கை வரலாறு மற்றும் முடிவுகள் பலருக்கும் உதவேகத்தை அளிக்கும். தீர்மானம் மற்றும் உறுதியான நபர்களால் மட்டுமே சாதனை செய்ய இயலும் என்பதை அன்றே நமக்கு கற்றுக்கொடுத்தவர். வறுமை, கல்வியின்மை, நோய் போன்றவை இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சனைகள் என்று நேதாஜி கருதினார். 

சமூக ஒற்றுமை இருக்கும் இடங்களில் பிரச்சனைகள் சரியாகிவிடும். நேதாஜி ஆசைப்பட்ட இந்தியாவின் சக்திவாய்ந்த அவதாரம் தற்போது உலகத்திற்கு உணர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கு சவால் விடுத்தால், தக்க பதிலடி வழங்கப்படும். 

பிற நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி உதவி செய்த இந்தியாவை நினைத்து, நேதாஜி பெருமைகொள்வார். ஹௌரா - கல்ஹா இரயில் இனி நேதாஜி இரயில் என்று அழைக்கப்படும் " என்று தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister Modi Talks about Nethaji and Indian Nation Protest 23 Jan 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->