வறுமையை ஒழிக்க கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் - பிரதமர் மோடி  - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தெரிவித்ததாவது, 

"மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியின் பயன்பாடு, வசதி படைத்த மாநிலங்களுக்குத்தான் சாதகமாக மாற்றப்பட்டதே தவிர ஏழை மாநிலங்களுக்கு தேவையான பங்கு கிடைக்கவில்லை. 

நாட்டின் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால், கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை வலுப்படுத்த வேண்டும். ஏழை மக்களுக்கு உதவும் வகையில் கிராமப்புற வேலை உறுதித் திட்டம் மறுசீரமைக்கப்பட வேண்டும்" என்று பிரதமர் மோடிதெரிவித்தார்.

இந்நிலையில், இந்த திட்டத்தை மறுஆய்வு செய்வதற்கு மத்திய அரசு முன்னாள் ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமர்ஜித் சின்ஹா தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi speach for Rural Employment guarentee Scheme


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->