காசி தமிழ் சங்கமம் 4.0 ஆரம்பம்: பிரதமர் மோடி வாழ்த்து..! - Seithipunal
Seithipunal


காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நான்காவது பதிப்பு இன்று (டிசம்பர் 02) தொடங்கியது. மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன் தமிழக ஆளுநர் ரவி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தமிழகத்துக்கும் , காசி நகருக்கும் இடையே உள்ள ஆழமான நாகரிக தொடர்புகளை கொண்டாடுவதற்காக காசி தமிழ் சங்கமம் 4.0 பதிப்பை மத்திய கல்வி அமைச்சகம் டிசம்பர் 02 முதல் டிசம்பர் 15 வரை நடத்துகிறது.

'தமிழ் கற்கலாம்' என கருப்பொருளில் குறித்த நிகழ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து ஏழு குழுக்கள் காசிக்கு செல்லவுள்ளன. இந்தாண்டு நடைபெறும் காசி தமிழ்ச்சங்க நிகழ்வுக்கு  பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

''காசி தமிழ் சங்கமம் இன்று தொடங்கிய நிலையில் ' ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வை வலுப்படுத்தும் இந்த துடிப்பான நிகழ்ச்சிக்கு எனது வாழ்த்துகள். காசி தமிழ் சங்கமத்துக்கு வரும் அனைவருக்கும் காசியில் இனிமையான மற்றும் மறக்க முடியாத நினைவுகள் அமையட்டும்.'' என்று அந்த பதிவில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi congratulates the Kashi Tamil Sangamam event


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->