விபத்தில் சிக்கிய ரிஷப் பண்டின் தாயாருக்கு பிரதமர் மோடி ஆறுதல்.!  - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியில் ஒருவரான ரிஷப் பண்ட் நேற்று அதிகாலை டெல்லியில் இருந்து தன்னுடைய சொந்த ஊரான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் மாவட்டம் ரூர்கீக்கு சொகுசு காரில் சென்றார். 

அப்போது, கார் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் மங்கலார் என்ற பகுதியில் மிக வேகமாக சென்றுகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ரிஷப் பண்ட்  காரின் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்து உயிர் தப்பினார். இருப்பினும், அவரது தலை, முதுகு, காலில் பலத்த காயம் ஏற்பட்டது.  ரிஷப் பண்ட் காரில் இருந்து வெளியில் வந்த சிறிது நேரத்திலேயே கார் முற்றிலும் எரிந்து நாசமானது.

அப்போது, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் ஓடிவந்து ரிஷப் பண்டை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு தற்போது டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்க்கு ரசிகர்கள் மற்றும் சக வீரர்கள் என்று அனைவரும் வருத்தம் தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி ரிஷப் பண்டின்  தாயாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து, பிசிசிஐ வெளியிட்ட டுவிட்டர் பதிவில், "கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்டின் உடல் நலம் குறித்து அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்தார். பிரதமர் மோடியின் வார்த்தைகளுக்கும், உத்தரவாதத்திற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi Comfort to rishapant mother


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->