புதுச்சேரி துணை முதல்வராக நமச்சிவாயம்?.. 2 அமைச்சர்கள்?.. பாண்டிச்சேரி அரசியல்..!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்ற நிலையில், மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர் காங்கிரஸ் - பாஜக 16 தொகுதிகளை கைப்பற்றியது. 

இதனையடுத்து, நேற்று என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆட்சியை அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரிய நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்கு ஆதரவு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், என்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் கூறும் நேரத்தில் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும் என அறிவித்தார். 

இன்று பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், இதனைதொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் பாஜகவினரும் பாண்டிச்சேரி அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என்று தெரிவித்தார். பாஜகவுக்கு 2 அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி வரும் நிலையில், முதல்வராக என்.ஆர் காங்கிரஸ் ரங்கசாமி தேர்வு செய்யப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது. 

இதனையடுத்து, துணை முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் பதவி தொடர்பாக பாஜக தரப்பில் இருந்து என்.ஆர் காங்கிரஸிடம் பல்வேறு வலியுறுத்தல் வருவதாக தகவல் வெளியாகும் நிலையில், பாண்டிச்சேரியில் துணை முதலவர் பதவி இல்லை என்றாலும், அதனை உருவாக்க பாஜக திட்டம் தீயுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதன்படி, துணை முதலவர் பதவிக்கான அறிவிப்பு வந்ததும், பாஜக எம்.எல்.ஏ நமச்சிவாயத்தை துணை முதல்வர் பதவியில் அமர்த்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும், புதுச்சேரி அரசியல் சாசன அமர்வின் படி 3 எம்.எல்.ஏக்களை மத்திய அரசு நியமனம் செய்யலாம் என்பதால், அந்த இடத்தை பாஜக நிரப்பவும் தேவையான நடவடிக்கையை எடுத்து வருவதாக தெரியவருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry Deputy CM May Be BJP Namachivayam 5 May 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->