காங்கிரஸ் ஆதரவாளர் ஓடஓட வெட்டிக்கொலை... மாலையில் அரங்கேறிய பயங்கரம்.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் உள்ள முத்தியால்பேட்டை சின்னையாபுரம் பகுதியை சார்ந்தவர் கணேசன் (வயது 49). இவர் காங்கிரஸ் கட்சியின் பிரமுகராக இருந்து வருகிறார். மேலும், அம்மாநில முதல்வரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமி நாராயணின் தீவிர ஆதரவாளராகவும், கதிர் வாரியத்தில் நிர்வாகியாகவும் இருந்து வந்துள்ளார்.

இவர் நேற்று மாலை நேரத்தில், துக்க வீட்டிற்கு சென்று இல்லத்திற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டு இருந்த நிலையில், அங்குள்ள வாழைக்குளம் மாரியம்மன் கோவில் பகுதியில் வரும் போது, கொலை திட்டத்துடன் இருந்த வாலிபர் கணேசனை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க ஓடிய நிலையில், ஓட ஓட கொடூர கொலை அரங்கேறியுள்ளது. 

இந்த கொலையில் சம்பவ இடத்திலேயே கணேசன் உயிரிழந்த நிலையில், இந்த விஷயம் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry Congress Party Member Murder Police Investigation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->