அவசர ஊர்தி இல்லாததால் சோகம்.. 10 நாட்களே ஆன குழந்தை பரிதாபமாக பலியான சோகம்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருக்கனூர் சோரப்பட்டு காலனி மாரியம்மன் கோவில் பகுதியை சார்ந்தவர் மதுரை வீரன் (வயது 32). இவர் சலவை தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மல்லிகா (வயது 24). இந்த தம்பதிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு வர்ஷினி என்று பெயர் சூட்டியுள்ளனர். 

இந்நிலையில், குழந்தைக்கு நேற்று மாலை நேரத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, மல்லிகாவின் தாயார் சரசு (வயது 50) குழந்தையை மண்ணடிப்பட்டி அரசு சமுதாய நலவழி மைய மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார். அங்கு இருந்த மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சை அளித்துவிட்டு, மேல் சிகிச்சைக்கு புதுச்சேரி ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து குடும்பத்தினர் சார்பாக அவசர ஊர்தி கேட்டு கோரிக்கை வைக்கவே, அவசர ஊர்தி மற்றொரு அவசரத்திற்காக வெளியே சென்றுள்ளது. குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து மோசமானதால், இருசக்கர வாகனத்திலேயே புதுச்சேரிக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால், குழந்தை வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மன்னடிபட்டி சமுதாய நலவழி மையத்திற்கு சென்று போராட்டம் செய்துள்ளனர். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கூடுதல் அவசர ஊர்தியை ஏற்படுத்தி தருவதாக வாக்குமூலம் அளித்து மக்களை கலைந்து செல்ல வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pondicherry Baby died in Ambulance late Relations Protest


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->