பஞ்சாப் எல்லை மாவட்ட காவல் நிலையம் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


பஞ்சாபின் எல்லை மாவட்டமான தர்ன் தரனில் உள்ள காவல் நிலையம் மீது இன்று அதிகாலை ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் தரன் தரன் மாவட்டத்தில் அம்ரித்சர் - பதிண்டா நெடுஞ்சாலையோரம் சர்ஹலி நகரில் உள்ள காவல் நிலையம் அதிகாலை 1 மணியளவில் தாக்குதலுக்கு உள்ளானது என்றும் கட்டிடத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் இந்த ராக்கெட் லாஞ்சர் காவல் நிலையத்தின் சுவர், ஜன்னல் கண்ணாடிகள் உடைத்துக் கொண்டு காவல் நிலையத்துக்குள் விழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த தாக்குதல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த மே மாதம் பஞ்சாப் காவல் நுண்ணறிவு பிரிவின் தலைமை அலுவலகத்தில் நடந்த ராக்கெட் லாஞ்சர் தாக்குதலில் பயங்கரவாதி ஹர்விந்தர் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக போலீசார் தெரிவித்திருந்தனர். ஆனால் பயங்கரவாதி ஹர்விந்தர் கடந்த சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் பாகிஸ்தான் எல்லையோர மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Police Station In Punjab Border District Attacked with rocket launcher


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->