நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷ வாயு கசிவு 3 பேர் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அப்பகுதியில் உள்ள பலருக்கு மூச்சு திணறல் மற்றும் கண்ணெரிச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஷவாயு கசிவு காரணமாக பலர் வீடுகளை விட்டு தற்காலிகமாக வெளியேறி பாதுகாப்பு இடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த தகவலறிந்து போபால் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விஷவாயு கசிவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

போபாலில் உள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள 900 கிலோ எடையுள்ள குளோரின் வாயு உருளையின் முனையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கசிவு ஏற்பட்டதாக மாநகராட்சி குழு தெரிவித்துள்ளது

இந்த குளோரின் வாயு கசிவு காரணமாக மூன்று பேர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Poisonous gas leak in water treatment plant, 3 people admitted to hospital


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->