தனியார் பள்ளியில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்த பள்ளி நிர்வாகம்.! பெற்றோர்கள் எடுத்த அதிரடி முடிவு!! - Seithipunal
Seithipunal



மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அமனோரா பாரக் டவுனில் அமைந்துள்ளது அமனோரா எனும் தனியார் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி சில மாணவர்களின் பெற்றோர் சில நாட்களுக்கு முன்பு கல்வி அமைச்சரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பள்ளியின் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி நிர்வாகம் 486 மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை தபால் வழியாக அவர்களது இல்லத்திற்கே அனுப்பியுள்ளது. இதனால் மனமுடைந்த பல மாணவர்களின் பெற்றோர் மேலும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். 

இந்த நிலையில் அந்த பள்ளியில் பயிலும் மாணவரின் தந்தை ஒருவர் கூறுகையில், "இந்த பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி கட்டணம் உயர்த்தப்படுகிறது. அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதலாக இவர்கள் கட்டணம் வசூலிக்கின்றனர். இந்த பள்ளியில் ஒரு ஆண்டிற்கு 85000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கின்றனர். 

அவர்கள் வசூலிக்கும் பணத்தில் வெறும் 50000ரூபாய்க்கு மட்டுமே சரியான கணக்கு காணபிக்கப்படுகிறது. மீதமுள்ள தொகை என்னவாகிறது என்றே தெரியவில்லை. பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் உள்ள ஒருசில பணக்காரர்களின் உதவியுடன் தான் பள்ளி நிர்வாகம் இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே போராட்டத்தில் இறங்கியுள்ளோம்" என தெரிவித்துள்ளார். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

poarents strike against private school


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->