சூரியனை நனைக்கும் மழை., அற்புதக்காட்சி ! மோடி வெளியிட்ட அற்புத காணொளி!  - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம், மோதேராவில் உள்ள சூரிய கோயில் புஷ்பவதி நதிக்கு அருகில் அமைந்துள்ளது. இது சோலங்கி ஆட்சியாளர்களின் மரபையும் புகழையும் கட்டிடக் கலையையும் எடுத்துக்காட்டும் சின்னமாக உள்ளது. 

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் மொதேராவில் அமைந்துள்ள புகழ்பெற்ற சூரியனார் கோயிலின் வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தனது ட்வீட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

மழை நாளில் இந்த கோயிலை காண்பது ஒரு அற்புதக் காட்சியாக இருப்பதாக தலைப்பிட்டு அந்த வீடியோவைப் பிரதமர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

பிரதமர் வெளியிட்ட 55 வினாடிகள் கொண்ட வீடியோவில், கோயிலின் படிகளில் மழை நீர் ஓடுவதைக் காண முடிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi tweet sun temple video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->