#BREAKING: ஐக்கிய நாடுகள் சபையில் பிரமர் மோடியின் உரை!  - Seithipunal
Seithipunal


முதல் முறையாக இன்று காணொலிக் காட்சி மூலம் ஐநா சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஐநா சபை கூட்டத்தில் பிரதமர் மோடி தனது உரையாற்றி வருகிறார். பிரதமரின் அந்த உரையில், "கால மாற்றத்திற்கேற்ப, ஐநா சபை தனது செயல் முறைகளை மாற்ற வேண்டியுள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் ஐநா பல சாதனைகளை புரிந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில்

ஐநா சபையை மாற்றி அமைப்பதற்காக இந்தியா நீண்ட காலமாக காத்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் ஸ்தாபன உறுப்பினர்களில் ஒருவர் என்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது.130 கோடி மக்களின் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ள வந்துள்ளேன்.

கடந்த 8 மாதங்களாக கொரோனா தொற்றால் உலகமே போராடி வருகிறது. மக்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை இழக்கும் நிலை ஏற்பட்டது. நாங்கள் வலிமையாக இருந்தபோது உலகிற்கு எந்த சுமையும் தரவில்லை. தீவிரவாதம் என்பது உலக அமைதிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. உலகில் அமைதியை நிலைநாட்ட இந்தியா பல வீரர்களை இழந்துள்ளது.

உலக பொருளாதாரத்தை சீர்திருத்த வழிகள் இருக்கின்றன. ஐ.நா. சபை உருவாக்கப்பட்ட நோக்கம் இந்திய சிந்தனைகளுடன் இணைந்தது. இந்த உலகத்தை நாங்கள் குடும்பமாக கருதுகிறோம், இது எங்கள் கலாசாரம். ஐ .நா. அவையில் இந்தியா அதைத்தான் எதிரொலித்திருக்கிறது. அக். 2 உலக அமைதி தினம், அதை உருவாக்கியது இந்தியா தான்.

இந்தியா எப்போதும் சுயநலத்துடன் சிந்தித்தது இல்லை. அனைத்து மதங்களையும் உள்ளடக்கி செயல்படுகிறது. யாருக்கும் எப்போதும் எதிராக இருந்ததில்லை. எங்கள் வளர்ச்சியில் இருந்த திட்டங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதில் பின் தங்கியதில்லை. அமைதி,பாதுகாப்புக்காகத்தான் இந்தியா எப்போதும் குரல் எழுப்பும்.

உலகின் 150 நாடுகளுக்கு கொரோனா மருந்தை இந்திய மருத்துவமனைகள் அளித்துள்ளது. கொரோனா தடுப்பு மருந்து சோதனையில் 3 நிலைகளை கடந்துள்ளோம். அடுத்தாண்டு ஜனவரி மாதம் இந்தியா கொரோனா தடுப்பில் தனது பொறுப்பை நிறைவேற்றும்.  500 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு இந்தியா இலவச மருந்து வழங்கியுள்ளது.

மாற்றம், சீர்திருத்தம் என்ற மந்திரங்கள் மூலம் இந்திய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த பாடுபடுகிறோம். இந்த மந்திரம் மற்ற நாடுகளுக்கும் பலன் அளிக்கக் கூடியது. கிராமங்களிலுள்ள 150 மில்லியன் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு 26 வாரம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறது. ஆப்டிகல் பைபர் மூலம் இணைய வசதியையும் பரவலாக்கப்பட்டுள்ளது. சுயசார்பு இந்தியா கொள்கையை முன்னெடுக்கிறோம். பெண்கள் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிக்கிறோம்." என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi speech to un meeting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->