22 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு... மோடி பரபரப்பு அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


சீன நாட்டில் உள்ள யூகான் நகரினை மையமாக வைத்து பரவிவந்த கரோனா வைரஸ், உலகம் முழுவதிலும் சுமார் 160 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரசால் உலகம் முழுவதும் 8,982 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்தியாவில் 174 பேருக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், 4 பேர் பலியாகியுள்ளனர். 

கரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அதிகளவில் கூட வேண்டாம் என்றும், பள்ளி கல்லூரிகளுக்கு முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. சில தேர்வுகளும் இரத்து செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. மக்கள் அதிகளவில் கூடும் கோவில்கள், சுற்றுலா தளங்கள், வணிக வளாகங்கள் போன்றவை மூடப்பட்டது.

இந்த நிலையில், இந்தியாவின் பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இது தொடர்பான தகவலில், மக்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் முறைக்கு மாற வேண்டும். இரவு நேரத்தில் வெளியே வருவதை தவிருங்கள். இந்த ஒத்துழைப்பு நாட்டு மக்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன். வரும் ஞாயிறன்று மக்கள் கைதட்டி கரகோஷம் எழுப்ப வேண்டும். நம் உயிரை காக்க பணியாற்றும் அனைவரையும் கைதட்டி உற்சாகப்படுத்துவோம். 

உடல்நலக்குறைபாட்டால் பின்னாளில் அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு இருப்பவர்கள் சற்று காலம் தாழ்த்தி அறுவை சிகிச்சை செய்யுங்கள். இப்போது பணிக்கு வர இயலாமல் போகும் தொழிலாளரின் சம்பளத்தில் பிடித்தம் செய்யாதீர்கள். பொதுமக்கள் பீதிக்கு உள்ளாகி பொருட்களை வாங்கி பதுக்கல் செய்ய வேண்டாம். தேவைக்கான பொருட்களை மட்டுமே வாங்குங்கள். மார்ச் 22 ஞாயித்துக்கிழமையில் ஊரடங்கு உத்தரவு மக்களுக்காக பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்காக உழைத்து வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், உணவு விநியோகம் செய்யும் நபர்கள் என்று பலரும் மக்களுக்காக பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதுவரை மத்திய சுகாதாரத்துறை 8 உயர்மட்ட கூட்டத்தை நடத்தியுள்ளது. உலகமே கரோனா தகவலை கவலையுடன் நோக்கி வருகிறது. நமது ஆரோக்கியம், உலக ஆரோக்கியம் என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM modi speech about corona spread and Sunday emergency declaration


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->