நீரஜ் சோப்ரா புதிய சாதனை! பிரதமர் மோடி வாழ்த்து!
PM Modi Neeraj Chopra javelin throw
தோகாவில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள தொடரின் 3-வது சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய சாதனையை நிகழ்த்தி கவனம் ஈர்த்துள்ளார். இந்த போட்டி கடந்த ஏப்ரல் 26ல் தொடங்கி, ஆகஸ்ட் 28 வரை நடைபெற உள்ளது.
நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதலில், நீரஜ் 90.23 மீட்டர் தூரம் எறிந்து, தனது சிறந்த சாதனையை கடந்து, முதல் முறையாக 90 மீட்டரை கடந்தார். இதற்கு முன், 2022ல் ஸ்டாக்ஹோம் போட்டியில் அவர் 89.94 மீட்டர் தான் எறிந்திருந்தார்.
இந்த சாதனையுடன், 90 மீட்டர் தாண்டிய 3-வது ஆசியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (92.97 மீ.) மற்றும் சீன தைபேயின் சாவோ சுன் செங் (91.36 மீ.) இந்த இடத்தை வகித்துள்ளனர்.
இவ்வளவு பெரிய சாதனை படைத்தும், நீரஜ் 2-வது இடத்தை மட்டுமே பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.06 மீட்டர் எறிந்து முதலிடம் பிடித்தார். கிரனடாவின் பீட்டர்ஸ் மூன்றாவது இடத்தையும், இந்தியாவின் ஜெனோ கிஷோர் 8-வது இடத்தையும் பெற்றனர்.
புதிய சாதனைக்காக பிரதமர் மோடி, நீரஜ் சோப்ராவுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.
English Summary
PM Modi Neeraj Chopra javelin throw