ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்தநாள் - பிரதமர் மோடி மரியாதை - Seithipunal
Seithipunal


இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு 1889ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி பிறந்தார். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர் என்பதால், இவர் பிறந்தநாள் அன்று "குழந்தைகள் தினம்" கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் ஜவஹர்லால் நேருவின் 133வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள நேருவின் நினைவிடமான சாந்தி வேனில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். 

மேலும் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தும் வகையில், நாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்ந்தார். 

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அவரது பிறந்தநாளில், நமது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு எனது மரியாதை. நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பையும் நினைவு கூர்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi honors Jawaharlal Nehru 133rd birthday


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->