கொரோனா பரவலை தடுக்க, அடுத்த கட்ட நடவடிக்கையில் பிரதமர் மோடி! - Seithipunal
Seithipunal


இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் வுடன் இன்று தொலைபேசியில் பேசினார். இந்த உரையாடலின் போது, கடந்த வருடம் தென் கொரிய நாட்டிற்கு சென்ற பயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையே அதிகரித்து வரும் நட்புறவு திருப்தி அளிப்பதாக தெரிவித்தார்.

தற்போது உலகமே அச்சத்தில் இருக்கும் கோவிட்-19 தொற்று குறித்தும், அதனால் உலக சுகாதார கட்டமைப்புக்கும் பொருளாதார நிலைமைக்கும் ஏற்பட்ட சவால்கள் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் விவாதித்தனர். மேலும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தங்களது நாடுகளில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

இந்த சிக்கலை சிறப்பாக எதிர்கொண்ட தென் கொரிய நாட்டுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இந்தியாவின் பெரும் மக்கள் தொகை, ஒற்றுமை உணர்வோடு கொரோனவை எதிர்த்து போராடுவதற்காக ஊக்கப்படுத்தியதற்காக இந்தியாவை தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் பாராட்டினார்.

மேலும் இந்தியாவிலுள்ள கொரிய மக்களுக்கு இந்திய அதிகாரிகள் அளித்து வரும் ஆதரவுக்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்தார். அதேபோல இந்திய நிறுவனங்களால் வாங்கப்பட்டு வரும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் விநியோகங்களை கொரிய அரசு ஆதரிப்பதற்காக பிரதமர் மோடி அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

மேலும் அந்தந்த நாடுகளின் வல்லுநர்கள், கொரோனவிற்கான தீர்வுகளை ஆய்வு செய்யும் போது, ஒருவருக்கு ஒருவர் தொடர்ந்து தொடர்புகொண்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். இந்த செயலானது இந்தியாவிற்கு புதிய நம்பிக்கையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தென்கொரியா கொரோனவை சிறப்பாக எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pm modi discuss with south Korea president


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->