கழட்டிவிட படுகிறார் பிரசாந்த் கிஷோர்! வெளியான அதிர்ச்சித் தகவல்! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தல்களில், வியூகங்களை வகுக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள் முக்கிய பங்கை வகித்து வருகின்றன. அதன்படி கடந்த 2013 ஆம் ஆண்டு கேஜ்ரிவாலுக்காக தேர்தல் பணியாற்றிய ஐபேக் நிறுவனத்தின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர், அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றிக்கு பெரிதும் உதவினார். அடுத்தபடியாக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக விற்கு வியூகங்களை அமைத்து கொடுத்து வெற்றி பெற்றதையடுத்து, அவர் வேறு வேறு கட்சிகளுக்கு பணியாற்றினார். 

இந்தியா முழுவதும் கட்சிகளிடையே அவருக்கு பெரிய மவுசு உருவானது. இந்த நிலையில் அவர் தமிழகத்தின் எதிர்க் கட்சியான திமுகவுடன், சட்டமன்ற தேர்தலில் வியூகங்களை வகுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு தற்போது பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.  இதற்கிடையே தனது சொந்த மாநிலம் பீகாரில் ஆளும் கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் ஐக்கியமானார். கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் கட்சியின் தேசிய துணைத் தலைவராக பிரசாந்த் கிஷோரை நியமித்தார். 

இந்த நிலையில் விரைவில் அம்மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் தற்போது பாஜக ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து பாஜக விற்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து வருவதால், அது விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் சிக்கலை உண்டாக்கும் என்பதால்,  நிதிஷ்குமார் கிஷோரை தவிர்ப்பதாக கூறப்படுகிறது. 

சட்டமன்ற தேர்தல் தொடர்பாக நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை அழைத்த நிதிஷ்குமார், பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும், அதேபோல நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரம் செய்பவர்கள் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pirsanth kishore will quiet from IJD


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->