#சற்றுமுன்: சபரிமலை குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட கேரள அரசு.!  - Seithipunal
Seithipunal


சுப்ரீம் கோர்ட்டு, "அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோவிலுக்கு செல்லலாம்" என தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை மாநிலத்தில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அமல்படுத்தியது. ஆனால், இந்த உத்தரவுக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் இந்து அமைப்புகள் சார்பில் கிளம்பியது. இதனால் சில வன்முறை சம்பவங்களும் நிகழ்ந்தது.

அந்த எதிர்ப்புகளையும் மீறி இரண்டு பெண்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். இந்த நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரளாவில் ஆளும் கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதற்கு சபரிமலை விவகாரம் காரணம் என பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்து வந்தது. இது தொடர்பாக, முதலமைச்சர் பினராயி விஜயன் தனது நிலைப்பாட்டிலிருந்து மாறுகிறார் என செய்தியாளர்களிடம் பேசிய பொழுது பதில் அளித்தார்.

supreme court seithipunal

"அதில் பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் ஆளும் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு சபரிமலை விவகாரம் தான் காரணம் என நினைக்க தேவையில்லை. பாஜகதான் சபரிமலையை பயன்படுத்தி அரசியல் செய்யும். ஆனால் எங்களை இது பாதிக்காது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக அவசர சட்டம் கொண்டு வருவோம் என பாஜக ஏற்கனவே கூறியிருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டுக்கு எதிராக சட்டம் கொண்டு வர முடியாது. அவர்கள் பொய்யான நம்பிக்கையை விதைக்க நினைக்கின்றனர்.

இது அவர்களுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும், எங்களுக்கு அல்ல. சபரிமலை பக்தர்களுக்கு நாங்கள் துணை நிற்போம் என்பதை தெளிவாக கூறி விட்டோம். சபரிமலை விவகாரத்தில் மாநில அரசின் நிலைப்பாட்டில், எந்த ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அமல் படுத்துவது தான் எங்கள் நிலைப்பாடு. இதில் நீதிமன்றம் ஏதாவது மாற்று உத்தரவிட்டால் அதன்படி நாங்கள் செயல்படுவோம்." என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pinarayi vijayan says about sabarimala


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->