உச்சகட்டத்தில் கொரோனா.. மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த முதலமைச்சர் சூசகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகா, கேரளா மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் உச்சத்தை எட்டியுள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் உச்சத்தை எட்டியுள்ளது. இதனால், கேரளாவில் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது குறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

நேற்று, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளருக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியவை, கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 38 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பதிவாகியுள்ளது. இதில் 226 பேருக்கு திருவனந்தபுரத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தற்போது, உள்ள கேஸ்களில் எண்ணிக்கை 8,818 ஆக உயர்ந்துள்ளது. அதையடுத்து முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து செய்தியாளர்கள் பினராயி விஜயன் இடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், நாங்கள் ஏற்கனவே மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தி இருந்தோம். இப்போது, அதுபோன்ற சூழ்நிலை பற்றி யோசித்து வருகிறோம். இருப்பினும் இன்னும் முடிவெடுக்கவில்லை. முழு ஊரடங்கு குறித்து முடிவெடுக்க வேண்டிய தேவை இருப்பதாக நினைக்கிறேன் என பினராயி விஜயன் சூசகமாக பதிலளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pinarayi vijayan says about full lock down


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->