கொரோனா ஊரடங்கு உத்தரவினால், பெட்ரோல் பங்க் முடங்குகிறதா.?! வெளியான அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும், பொதுவெளிகளில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 

நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 260க்கும் மேல்உயர்ந்துள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர்.

நாளை ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கும் பொருட்டு நாளை தமிழகத்தில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படுகின்றன என அமைச்சர் தங்கமணி தெரிவித்து இருந்தார், 

இந்நிலையில், தமிழகத்தில் நாளை பெட்ரோல் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. கொரோனா பரவலை தடுக்க நாளை நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ள நிலையில், குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்கள், மட்டும் நாளை பெட்ரோல் பங்க்கில் பணிபுரிவர் என தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

petrol punk will open tommorrow


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->